மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது பிரபலமான ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் (BSOD)-ஐ நிறுத்திவிட்டு, புதிய பிளாக் ஸ்கிரீன் ஆஃப் டெத்-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த மாற்றம், அதன் இயக்க முறைமையின் மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
BSOD கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக விண்டோஸில் ஒரு பிரதான அம்சமாக இருந்து வருகிறது.
ஒரு ப்ரோக்ராம் செயலிழந்து போகும்போது அல்லது செயல்படாமல் போகும்போது இது தோன்றும்.
விண்டோஸின் பிரபலமான நீலத் திரை கருப்பு நிறமாக மாறுகிறது
