சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை சிச்சுவான் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, குவாங்யுவான் நகரத்திலுள்ள ‘ஷூடாவ் எனும் பழைய பாதை, தேயாங் நகரத்திலுள்ள சன்ஷிங்டுய் அருங்காட்சியகம் ஆகிய இடங்களை அடுத்தடுத்து சென்றுப் பார்வையிட்ட அவர், உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு, வரலாறு மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய களங்களின் அகழாய்வு, தொல்லியல் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பணிகளைப் பற்றி அறிந்துக் கொண்டார்.