பிரதேச ஒத்துழைப்புகள் குறித்து லீ ச்சியாங் வழங்கிய 4 முன்மொழிவுகள்

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், நவம்பர் 7ஆம் நாள் குன்மிங் நகரில் நடைபெற்ற பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார். கம்போடியா, லாவோஸ், மியான்மார், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களும், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவரும் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.

இப்பிரதேசத்திலுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது குறித்து லீ ச்சியாங் 4 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, திறப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஊன்றி நின்று, மேலும் உயர் நிலையிலான மற்றும் பெரும் அளவிலான ஒன்றுக்கொன்று திறப்பைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். இரண்டாவதாக, புத்தாக்கத்தின் வழிக்காட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து, புத்தாக்க கொள்கைக்கான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரதேச வளர்ச்சியின் புதிய இயக்காற்றலை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக, அடிப்படை கட்டுமானம், கொள்கை, சட்டம் மற்றும் விதி, வரையறை உள்ளிட்ட துறைகளில் இணைப்பை வலுப்படுத்தி, பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கினை விரைவுபடுத்த வேண்டும். நான்காவதாக, தொடர்பு மற்றும் ஒத்துழைப்புகளை நெருக்கமாக்கி, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, ஐ.நா, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய அடிப்படை வசதி முதலீடு வங்கி ஆகியவற்றுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இப்பிரதேசத்தின் நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்கு பற்றிய தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்தி, புத்தாக்க வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த விரும்புவதாக இக்கூட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author