சிஜாங்கில் விமானப் போக்குவரத்து மூலம் ஜனவரி முதல் நவம்பர் 23ஆம் நாள் வரையிலான காலக்கட்டத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
இந்த எண்ணிக்கை, வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியது என்று சீன பயணியர் விமானப் போக்குவரத்து துறையின் சிஜாங் தன்னாட்சிப் பிரதேச நிர்வாகம் அண்மையில் தெரிவித்தது.
கடந்த ஜுலை 21ஆம் நாள், ஒரு நாளைக்கு 29ஆயிரம் விமானப் பயணிகள் வந்து சென்றனர். 1965ஆம் ஆண்டு சிஜாங்கில் விமானப் போக்குவரத்து திறந்த பிறகு மிக அதிகமான தினசரி பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜுலையில், விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டி, வரலாற்றில் ஒரு திங்களில் மிக அதிகமான பதிவாகவும் உள்ளது.