லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்தனர்.
லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதியைக் கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.
இதன் காரணமாக, அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்நிலையில், லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றனர். அந்த படகில், பாகிஸ்தான், எகிப்து, வங்காளதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்துள்ளனர்.
ஐரோப்பவுக்கு சென்றால், நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த படகு துனீசியா கடலோரப் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், வங்காளதேசத்தை 8 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் ஒருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிலர் மாயமாகி உள்ளனர். உயிரிழந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.