நடிகர் தனுஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் ஹிந்தி மொழி படமான ‘ராஞ்சனா’)-வின் (தமிழில் அம்பிகாபதி) அங்கீகரிக்கப்படாத மறு வெளியீட்டை கண்டித்துள்ளார்.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டு தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பதிப்பு (தமிழ்) அசல் படைப்பாளர்களின் அனுமதியின்றி வெளியிடப்பட்ட வித்தியாசமான முடிவைக் கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான அவரது அறிக்கையில், தனுஷ் இந்த வளர்ச்சியால் “மிகவும் வருத்தமடைந்ததாக” கூறியுள்ளார்.
தனுஷின் கதாபாத்திரமான குந்தன், ஒரிஜினல் கதைப்படி இறந்துவிடுவார், எனினும் தற்போது மாற்றமாக கிளைமாக்ஸ் காட்சியில் அவர் உயிர் பிழைப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
AI- மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ கிளைமாக்ஸ்- வருத்தம் தெரிவித்த தனுஷ்
