சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவி கோமல் நிகாம், அரசுப் பல்கலைக் கழக கேன்டீனில் உணவருந்திய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
5 STAR தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கேன்டீனின் முதல் தளத்தில் வழக்கமான சீன உணவுகள் கிடைப்பதாகவும், இரண்டாம் தளத்தில் இனிப்புகள், பழங்கள், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவு வகைகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தளத்தில் தாய்லாந்து, அமெரிக்கா, சீன மற்றும் மேற்கத்திய உணவு வகைகளுக்கான தனித்தனி பிரிவுகள் உள்ளன. கடல் உணவு வகைகளுக்குப் புகழ்பெற்ற ஜெனித் வோக் பிரிவும் உள்ளது.
இந்த உணவகத்தில் ஆக்டோபஸ் போன்ற வித்தியாசமான உணவுகளும் கிடைப்பதாகக் கோமல் தெரிவித்துள்ளார்.
அங்கு மாணவர்களுக்கு இலவச தேநீர் மற்றும் சூப் வழங்கப்படுகிறது. குறிப்பாக உணவு சுத்தமாகவும், சுவையாகவும், நியாயமான விலையில் கிடைப்பதாகவும் மாணவி கோமல் கூறுகிறார்.
உணவருந்திய பிறகு தட்டுகள் மற்றும் கரண்டிகளைச் சுத்தம் செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சீனாவில் உணவு குறித்து தவறான கருத்துகள் உள்ளதாகவும் அதனை பொய்யாக்கும் வகையில் இந்த கேன்டீன் உள்ளதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
