சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிதான உறவை நனவாக்க வேண்டும்:ஷிச்சின்பிங்

உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வ நெடுநோக்கு நிதான உறவு என்ற புதிய திசையமைவு, இரு நாட்டுறவின் நடைமுறையை வெளிப்படுத்தியுள்ளதோடு, எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்பையும் காட்டுகிறது என்றார். இது இரு நாடுகளும் சரியான முறையில் பழகுவதற்கான வழியை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இரு நாடுகள் கூட்டாகச் செயல்பட்டு, மேலும் நிதானமான ஆரோக்கியமான தொடரவல்ல சீன-அமெரிக்க உறவின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தைவான் பிரச்சினை பற்றி ஷி ச்சின்பிங் கூறுகையில், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றார். மேலும், தைவான் சுதந்திரவாதத்தை எதிர்க்கும் சரியான நிலைப்பாட்டில் அமெரிக்கா ஊன்றி நின்று, தைவான் பிரச்சினையைக் கவனமாகக் கையாள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சீன-அமெரிக்க நெடுநோக்கு ஒத்துழைப்புக்கும் இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கும் உறுதியான அடிப்படையை இட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நிலைமை பற்றி ஷிச்சின்பிங் கூறுகையில், அமெரிக்காவும் ஈரானும் இஸ்லாமாபாத் புரிந்துணர்வுக் குறிப்பாணையின் அடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் பாதைக்கு வெகுவிரைவில் திரும்பி, அணு பிரச்சினை உள்ளிட்ட பன்முக உடன்படிக்கையை எட்டி, அமைதியை நனவாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author