ஜோர்ஜியாவுக்கான சீனத் தூதரகம் 29ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, இரு தரப்பிலும் சாதாரண கடவுச்சீட்டைக் கொண்டவர்கள் விசா இன்றி பயணிப்பது தொடர்புடைய உடன்படிக்கை மே 28ஆம் நாள் தொடங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கிடையிலான நெடுநோக்குக் கூட்டாளியுறவில் மற்றொரு மைல்கல் சாதனையாகும். இதனால், இரு தரப்புகளுக்கிடையிலான மனிதத் தொடர்புகள் மேலும் வசதியான முறையில் அதிகரிப்பதோடு, பொருளாதார வர்த்தகம், பண்பாடு, சுற்றுலா முதலிய ஒத்துழைப்புகளும் விரைவுபடுத்தப்படும் என்று ஜோர்ஜியாவுக்கான சீனத் தூதர் சௌ ச்சியென் 29ஆம் நாள் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கையின்படி, சாதாரணக் கடவுச்சீட்டைக் கொண்ட இரு நாட்டு மக்களும் ஒன்றுக்கு ஒன்று எல்லை கடந்து பயணிக்கும் போது, விசா இன்றி நிலையில் தொடர்ச்சியாக 30 நாட்களாகத் தங்கலாம்.
இத்தகு வழிமுறையில் ஒவ்வொரு 180 நாட்களுக்குள்ளும் மொத்தமாக 90 நாட்கள் வரை விசா இன்றித் தங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.