முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிப்பு

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 39 இலட்சத்து 94 ஆயிரம் கோடி யுவானாக இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் ஏற்றுமதித் தொகை, 23 இலட்சத்து 20 ஆயிரம் கோடி யுவானாக இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் இறக்குமதித் தொகை 16 இலட்சத்து 74 ஆயிரம் கோடி யுவானாக இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 22.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வெளிபுறத்திலிருந்து பல்வேறு தாக்கங்களையும் அறைகூவல்களையும் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் பயனுள்ளதாகச் சமாளித்து, சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author