சீன நவீனமயமாக்கத்தின் மூலம் வல்லரசின் கட்டுமானம் மற்றும் தேசிய இன மறுமலர்ச்சி இலட்சியத்தை பன்முகங்களிலும் முன்னேற்றுவது என்ற தலைப்பிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் ச்சியு ஷி இதழில் வெளியிடப்படவுள்ளது.
சீன நவீனமயமாக்கம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் நீண்டகாலமாக ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் முக்கிய சாதனையாகும். சீன நவீனமயமாக்கம், வல்லரசின் கட்டுமானம் மற்றும் தேசிய இன மறுமலர்ச்சியை முன்னேற்ற உதவும். பல்வேறு நாடுகளின் நவீனமயமாக்கத்தின் பொது அம்சங்களையும், சீன நாட்டின் நிலைமைக்கு ஏற்ற தனிச்சிறப்பையும் இது கொண்டுள்ளது. சீன நவீனமயமாக்கம், மனித குலத்தின் நாகரிகத்தின் புதிய வடிவங்களை உருவாக்கியுள்ளது. இது, சீனத் தேசத்தின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, மனித குலத்தின் அனைத்து தலைசிறந்த நாகரிகங்களின் சாதனைகளையும் பயன்படுத்தியுள்ளது. உலகிற்கு புதிய நவீனமயமாக்க முறையையும், பல வளரும் நாடுகளுக்கு புதிய தெரிவையும் வழங்கியுள்ளது என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.