அமெரிக்காவில் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த ஷி ச்சின்பிங்

உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 25ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்காவில் தனது அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு, பெய்ஜிங்கிற்குத் திரும்பினார்.

வாஷிங்டனிலிருந்து புறப்பட்ட போது, அமெரிக்க அரசின் உயர்நிலை அதிகாரிகள் விமான நிலையத்தில் அவருக்கு வழியனுப்பி வைத்தனர்.

விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில், அமெரிக்காவில் வாழும் சீனர்கள் மற்றும் சீன மாணவர்களின் பிரதிநிதிகள், இரு நாடுகளின் தேசிய கொடிகளை அசைத்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் பயணம் வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.  

You May Also Like

More From Author