தொடர்ந்து வலுவடையும் சீனாவின் பசுமை வளர்ச்சிக்கான ஆற்றல்

சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான சீன சர்வதேச ஒத்துழைப்பு கவுன்சிலின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் தொடக்க விழா 27ஆம் நாள் நடைபெற்றது. சீனா தனது மாற்றத்தை விரைவுபடுத்தி, பசுமை வளர்ச்சிக்கான இயக்காற்றலைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக, சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், இக்கவுன்சிலின் சீன நிர்வாகத் துணைத் தலைவருமான ஹுவாங் ருன்ச்சியு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், காலநிலை மாற்றம் அவசரமான உண்மையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என இவ்வாண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் எங்களை எச்சரித்துள்ளதாக கூறினார். அதேவேளையில், புதிய சுற்று தொழில்நுட்பப் புரட்சி மற்றும் தொழில்துறை மாற்றத்தின் முன்னேற்றங்களும், டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் பசுமை மயமாக்கலின் ஒருங்கிணைப்பும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. ஒத்துழைப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மீதான சர்வதேச சமூகத்தின் விருப்பம் வலுவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சூழலியலுக்கு முன்னுரிமை அளிக்கும் பசுமை வளர்ச்சி பாதையைச் சீனா உறுதியாகப் பின்பற்றும் என்றும், தனது சொந்த செயல்களின் மூலம் உலகளாவிய பசுமை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல்  ஒத்துழைப்பை முன்னெடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author