சீன வெளியுறவு அமைச்சர் மாவ்நிங் அம்மையார் 8ஆம் நாள் கூறுகையில், ஜப்பானில் சீன தூதரகத்தில் கத்தியுடன் புகுந்த குற்றவாளியை கடுமையாக தண்டிக்க சீனா மீண்டும் வலியுறுத்தியது என்று தெரிவித்தார்.
சீன தூதரகத்திற்குள் சட்டவிரோதமாக புகுந்த ஜப்பானிய முன்னாள் தற்காப்புப் படை அதிகாரி முராட்டா அகிரா மீதான வழக்கை அக்டோபர் முதல் நாள் டோக்கியோ நீதிமன்றம் முதல்முறையாக வெளிப்படையாக விசாரித்தது. கத்தியுடன் தூதரகத்திற்குள் சட்டவிரோதமாக புகுந்த குற்றத்தை முராட்டா முழுமையாக ஒப்புக்கொண்டார்.
இது பற்றி மாவ்நிங் கூறுகையில், ஜப்பானிய தற்காப்புப் படையின் நடப்பு அதிகாரி கத்தியுடன் ஜப்பானில் உள்ள சீன தூதரகத்திற்குள் நுழைந்து, சீனாவின் தூதாண்மைப் பணியாளர்கள் மீது வன்முறை அச்சுறுத்தல் ஏற்படுத்தியது, சர்வதேச சமூகத்தில் முன்கண்டிராத கடும் குற்றம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டினார்.
