ரென் மின் பி மாற்று விகிதத்தின் மதிப்பு தொடர்பாக சீனாவின் கொள்கை விளக்கம்

Estimated read time 0 min read

சீன மத்திய வங்கியான மக்கள் வங்கி ரென் மின் பியின் மாற்று விகிதத்தின் மதிப்பு தொடர்பான கொள்கையையும் நிலைப்பாட்டையும் 8ஆம் நாள் விளக்கம் அளித்துள்ளது.

சந்தைத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, நாணயங்களின் கூடையைக் குறிப்பாகக் கொண்டு சரிசெய்யப்படும், நிர்வகிக்கக் கூடிய மிதக்கும் மாற்று விகித அமைப்பை சீனா கடைபிடிக்கின்றது. நாணயங்களின் மாற்று விகிதத்தை நிர்ணயிப்பதில் சந்தை தீர்க்கமான பங்கு வகிக்கின்றது என்று சீன மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

நாணய மாற்று விகிதத்தின் மதிப்பிறக்கம் மூலம் வர்த்தகப் போட்டியில் முன்னுரிமையைப் பெற சீனா விரும்பவில்லை. அதற்கு தேவையும் இல்லை. சொந்த நாட்டில் தொழிலின் போட்டியாற்றல் சரிந்தது, நிதி மற்றும் பொருளாதாரத்தின் பலவீனம் மற்றும் சிக்கலான கட்டமைப்புப் பிரச்சினை ஆகியவற்றை இதர நாடுகளின் மாற்று விகிதத்துக்குக் காரணமாகக் கூறுவது, தனது சொந்த பொறுப்பைத் தவிர்த்து ஓடுவதும் புறக்கணிப்பதும் ஆகும் என்று சீன மக்கள் வங்கி தெரிவித்தது.

You May Also Like

More From Author