சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த “முழு உலகமும் வசந்த விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டு இரசிப்பது” என்ற நிகழ்ச்சி ஜனவரி 22ஆம் நாள், கென்யாவின் நைரோபியிலுள்ள ஐ.நாவின் அலுவலகம், ஸ்பெயினின் மாட்ரிட், பிரேசிலின் சாவ் பாலோ ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் பொது இயக்குநருமான ஷென் ஹாய்சியொங், காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
நைரோபியிலுள்ள ஐ.நாவின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஷென் ஹாய்சியொங் கூறுகையில், தற்போது, வசந்த விழா உலகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகளவில் ஐந்தில் ஒரு பகுதியான மக்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் வசந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி 42 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு, சீன ஊடகக் குழுமத்தின் 82 மொழிகள் மற்றும் “5G+4K/8K+AI”தொழில் நுட்பங்களின் மூலம் இந்நிகழ்ச்சி வழங்கப்படும் என்றார்.