தேசிய நீர்வள வலையமைப்புக்கான முதலீடு அதிகரிப்பு

Estimated read time 0 min read

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீனாவின் நீர்வள வலையமைப்பு வளர்ச்சிக்கு தேவையான முதலீடு 6 லட்சம் கோடி யுவானைத் தாண்டும் என்று சீன நீர்வள அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகிறது.

இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் நாடு முழுவதும் 41 ஆயிரத்து 400 நீர்வள திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, 28 பெரிய நீர்வள திட்டப்பணிகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே நீர்வள வளர்ச்சிக்கு 79 ஆயிரத்து 500 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டிலிருந்து, தேசிய அளவில் முக்கியமான நீர்வளத் திட்டப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நீரை மடைமாற்றும் சில பெரிய திட்டப்பணிகளும் முக்கிய இடங்களிலுள்ள நீர் தேக்கத் திட்டப்பணிகளும் கட்டி முடிக்கப்பட்டு பயனளித்துள்ளன. இவையெல்லாம் மேலும் உயர்ந்த நிலையில் நாட்டின் நீர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author