சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் 15ஆம் நாள் மாலை ஃபுஜியேன் மாநிலத்தின் ட்சாங்சோ நகரிலுள்ள டுன்ஷேன் வட்டத்தில் கள ஆய்வு பயணம் மேற்கொண்டு உள்ளூரில் கிராமப்புற பன்முக வளர்ச்சியை முன்னேற்றுவது, பண்பாடு மற்றும் பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாப்பது முதலிய நிலைமையைக் கேட்டறிந்தார்.
6.83சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய ஔஜியௌ எனும் கிராமம் டுன்ஷேன் வட்டத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.
கடல் மீன்பிடிப்பு, நீர் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு மற்றும் பதனீடு, மின் வணிக வர்த்தகம், கிராம சுற்றுலா முதலிய 5 முக்கிய துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இக்கிராமம் முன்னேற்றி வருகிறது.
2023ஆம் ஆண்டு கிராமத்தின் மொத்த வருமானம் 17லட்சத்து 30ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. கிராமவாசிகளின் நபர்வாரி வருமானம் 58ஆயிரம் யுவானைப் பெற்றுள்ளது. தேசிய நாகரிக கிராமம், நாடளவில் மிக அழகான மீன்பிடி கிராமம் முதலிய கௌரவத்தை இக்கிராமம் முறையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.