இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

Estimated read time 0 min read

இந்தியாவின் வெற்றியால் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த புளூம்பெர்க் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகம் கொரோனா பெருந்தொற்று, பல்வேறு பிராந்தியங்களில் போர்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், விநியோகச் சங்கிலி, எரிசக்தி, கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை அழுத்தம் கொடுக்கும் கருவிகளாக மாறி வருவதாகவும் கூறினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா இலக்குகளை முன்கூட்டியே எட்டியதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் ஒரு சிலருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அனுபவங்களைப் பிற நாடுகளுடன் பகிர்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும், இந்தியாவின் திறன்கள் உலக நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இந்தியாவின் வெற்றியால் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

You May Also Like

More From Author