சீன-ஆப்பிரிக்க வர்த்தகம் பெருமளவில் அதிகரிப்பு

சீன-ஆப்பிரிக்க வர்த்தக ஒத்துழைப்பு கடந்த சில ஆண்டுகளில், தொடர்ந்து ஆழமாகி வருவதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுதி அளவு வேகமாக வளர்ந்து வருகிறது.

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 2ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, சீன-ஆப்பிரிக்க வர்த்தக அளவு 10 ஆயிரம் கோடி யுவானிலிருந்து ஒரு இலட்சத்து 98 ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. ஆண்டின் சராசரியான அதிகரிப்பு விகிதம் 17.2 விழுக்காடாகும்.

இது, இதே காலத்தில் சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் 4.6 விழுக்காடு என்ற ஆண்டின் சராசரியான வேகத்தை விட அதிகம்.
இவ்வாண்டு முதல், சீன-ஆப்பிரிக்க வர்த்தகம் நிதானமாக வளர்ந்து வருகிறது.

இவ்வாண்டின் முதல் 7 திங்கள்காலத்தில், ஆப்பிரிக்காவுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஒரு இலட்சத்து 19ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 5.5 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது.

You May Also Like

More From Author