சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் சாதிர் ஜபரோவின் மனைவி ஐகுல் ஜபரோவாவ் அம்மையாருடன் உள்ளூர் நேரப்படி ஆகஸ்டு 31ஆம் நாள் முற்பகல் பிஷ்கெக் நகரில், கிர்கிஸ்தான் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.
வரவேற்பு நிகழ்ச்சிகளை அவர்கள் கூட்டாக கண்டு ரசித்த பிறகு, கிர்கிஸ்தானின் பாரம்பரிய பண்பாட்டுக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அப்போது பெங் லீயுவான் கூறுகையில், கிர்கிஸ்தானின் நீண்டகால வரலாறுடைய கைவினை தொழில்களும், தனிச்சிறப்புடைய வாழ்க்கை பழக்கப் வழக்கங்களும் கண்காட்சியில் வெளிக்காட்டப்பட்டன. சீனாவும் கிர்கிஸ்தானும், பாரம்பரிய பண்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிக்கொணர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்றார். மேலும், இரு நாடுகள் மானுடவியல் பரிமாற்றத்தை விரிவுப்படுத்தி, மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை அதிகரிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
