140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சிக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 14ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இவ்வாழ்த்து கடிதத்தில் ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி நடத்தப்பட்ட கடந்த 70 ஆண்டுகளாக, சீன-வெளிநாட்டு வர்த்தகப் பரிமாற்றத்தை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பைச் சீனா விரிவுப்படுத்தி, திறப்புத் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கான பயனுள்ள மேடையாக இது மாறியுள்ளது என்றார். மேலும், புதிய யுகத்தில், உலகளாவிய பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைக் கூட்டாகப் பேணிக்காத்து, உலகத் தொழில் சங்கிலி விநியோகத்தின் நிலைத்தன்மையை உத்தரவாதம் செய்து, சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுப்படுத்தி, உலகத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்குப் புதிய இயக்காற்றலை ஊட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
140ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி அக்டோபர் 14ஆம் நாள் குவாங்தொங் மாநிலத்தின் குவாங்சோ நகரில் துவங்கியது.
