“புகையிலை பயன்பாட்டில் இந்தியா எங்குள்ளது?”.. வெளியானது அதிர்ச்சி தரும் புதிய புள்ளிவிவரங்கள்..!!! 

Estimated read time 1 min read

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் புகையிலை பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் அடிப்படையில், மியான்மர் நாட்டில் அதிகபட்சமாக 42.5 சதவீதம் பேர் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தி முதலிடத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து வங்கதேசம் (31.4%), இந்தோனேசியா (31%), நேபாளம் (28%) மற்றும் சீனா (22.7%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலின்படி, இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவோரின் விகிதம் 21.9 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட விரிவான கணக்கெடுப்பின்படி, ஆண்களில் சராசரியாக 10 பேரில் 4 பேர் வரை ஏதேனும் ஒரு வகையில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள ஆண்களிடையே இதன் தாக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படுவது சுகாதார நிபுணர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

மறுபுறம், பெண்களிடையே புகையிலை நுகர்வு விகிதம் ஒப்பிட்டளவில் குறைவாக இருந்தாலும், 100 பேரில் சுமார் 4 பெண்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். அதுவும் குறிப்பாக, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் சுமார் 17 சதவீதம் பேர் புகையிலை பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

வியட்நாம் (20.8%), இலங்கை (20.4%) மற்றும் பாகிஸ்தான் (17.4%) போன்ற நாடுகளும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள நிலையில், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author