ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

Estimated read time 1 min read

மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் குறிப்பிட்ட நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

வரும் 22-ஆம் தேதி இரவு 10 மணி வரை வழிபாடுகள் நடைபெற உள்ளன. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை குலுக்குள் முறையில் நடைபெறவுள்ளது. பந்தளம் அரச குடும்பத்தால் தேர்வு செய்யப்பட்ட சிறுவனும் சிறுமியும் இந்த தேர்வு நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். புதிய மேல்சாந்திகள் மண்டல-மகரவிளக்கு யாத்திரைக் காலம் முதல் ஓராண்டு காலத்திற்கு பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது…

Please follow and like us:

You May Also Like

More From Author