ஹாங்காங் மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் ஊக்கம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுலை 24ம் நாள் ஹாங்காங்கின் பேய் ஜியோ மேல்நிலை பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி, அன்பு மற்றும் ஊக்கம் அளித்தார்.


அவர் கடிதத்தில் கூறுகையில், சீன மக்கள் தொண்டர் படை தியாகிகளின் பூதவுடல் அடக்க நிகழ்ச்சி, தியேன் குங் விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சி முதலியவற்றில் பங்கெடுப்பதன் மூலம், சீனர்களான பெருமை, ஹாங்காங் இளைஞர்களின் கடமை மற்றும் பொறுப்பை நீங்கள் மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டதை அறிந்து, ஆறுதல் அடைந்தேன். ஹாங்காங்கின் எதிர்காலத்துக்கும் தேசிய மறுமலர்ச்சி நனவாக்கத்துக்கும் ஆக்கமுடன் பங்கு ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author