கூட்டாளி நாடு சேர்க்கப்பட்ட ஆசிய கலாச்சார பாரம்பரியத்திற்கான கூட்டணி

Estimated read time 0 min read

ஆசிய கலாச்சார பாரம்பரியத்திற்கான கூட்டணியின் கவுன்சிலின் 4வது கூட்டம் 18ஆம் நாள் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்றது. இதில், எகிப்து கூட்டாளி நாடாகவும், கஜகஸ்தான் பார்வையாளர் நாடாகவும் அங்கீகரிக்கப்பட்டன. இதன் மூலம், இக்கூட்டணியில் சேர்க்கப்பட்ட உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளின் மொத்த எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

இக்கூட்டத்தின் போது ஆசிய கலாச்சார பாரம்பரியத்திற்கான கூட்டணியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வெளியிடப்பட்டது. தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மேற்கொள்ளவும் உறுப்பு நாடுகளுக்கான டிஜிட்டல் தளத்தை இது உருவாக்குகிறது. மேலும், அழிந்து வரும் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு, தொழில்நுட்பத்தின் உதவி, ஏஐ மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகிய கருப்பொருட்களில் இக்கூட்டத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author