சீனாவில் விநோத காட்சிகள் இணையத்தில் வைரல் வீடியோ…!!” 

Estimated read time 1 min read

சீனாவில் நெடுஞ்சாலை ஓரம் லாரிகளை நிறுத்திவிட்டு, டிரைவர்கள் தங்கள் வாயில் கயிற்றைக் கட்டிக்கொண்டு தூங்கும் வினோதமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நீண்ட தூரம் பயணம் செய்யும் லாரி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள டீசலைக் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நூதன முறையைக் கையாளுகின்றனர்.

இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களில் இருந்து எரிபொருளைத் திருடும் கும்பல்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் ஒரு பகுதியாக, டிரைவர்கள் தாங்கள் தூங்கும் போது ஒரு கயிற்றின் ஒரு முனையை வாயிலும், மற்றொரு முனையை டீசல் டேங்க் மூடியிலும் இணைத்துக்கொள்கின்றனர்.

டேங்க் மூடியைத் திருடர்கள் திறக்க முயலும்போது, அந்த நடுக்கத்தில் கயிற்றின் மூலம் ஓட்டுநருக்கு உடனடியாக எச்சரிக்கை கிடைத்து விழித்துக்கொள்ள முடிகிறது. இதேபோல், லாரி கேபினுக்குள் யாரும் அத்துமீறி நுழைவதைத் தடுக்க, சீட் பெல்ட்டைக் கொண்டு இரு கதவுகளையும் சேர்த்து இறுக்கமாகக் கட்டும் மற்றொரு பாதுகாப்பு முறையையும் சில டிரைவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/Dct29DRTPIb/?utm_source=ig_web_button_share_sheet

நாளாந்திரப் பயணங்களில் தங்களது உடமைகளையும் எரிபொருளையும் பாதுகாத்துக் கொள்ள லாரி ஓட்டுநர்கள் கண்டுபிடித்துள்ள இந்த விசித்திரமான மற்றும் எச்சரிக்கையான திருட்டுத் தடுப்பு உத்திகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

You May Also Like

More From Author