வரும் 23ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

Estimated read time 1 min read

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெறும். மேலும் கர்நாடகாவில் ஹேரங்கி அணையில் நீர் தேக்குவது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பாகவும் விவாதம் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மற்றும் பற்றாக்குறை நீர் தொடர்பாக தமிழக அதிகாரிகள் இந்த கூட்டத்தின் போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த உள்ளனர். கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிட உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author