சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பாராட்டுகளைப் பெறும் நோக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் பழக்கம் தற்போது பெரும் பரவலாக உள்ளது.
குறிப்பாக ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் ஆபத்தான முறையில் வீடியோக்கள் எடுக்கப்படுவதால், மக்கள் உயிருக்கு நேரும் அபாயங்களைத் தவிர்க்க ரயில்வே துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் வீடியோ எடுப்பவர்களுக்கு எதிராக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக புகைப்படங்கள் எடுக்க அனுமதி இருப்பினும், ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பது விதிக்கு எதிரானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
