சீன-ரஷிய தலைமையமைச்சர்களின் 31ஆவது திட்டமிடப்பட்ட சந்திப்பு ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்றது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீன தலைமையமைச்சர் லீச்சியாங் 21ஆம் நாள் ரஷிய தலைமையமைச்சர் மிஷூஸ்தினுடன் இச்சந்திப்புக்குத் தலைமைத் தாங்கி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினையும் சந்தித்தார். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய பொது கருத்துகளை அடிப்படை கோட்பாட்டின்படி, முக்கிய துறைகளில் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, முன்னணித் துறைகளில் புதிய வளர்ச்சிக்கான உந்து சக்தியை ஊக்குவித்து, மானிடப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பலதரப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பின் செயல்பாடுகளை நெருக்கி, மேலதிக பயனுள்ள சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற வேண்டும் என்று இரு தரப்பும் ஒருமனதாக கருத்து தெரிவிப்பதாக மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.
சீன-ரஷிய தலைமையமைச்சர்களின் 31ஆவது சந்திப்பு
You May Also Like
More From Author
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை!
February 15, 2024
சீனப் பொருளாதாரத்தின் மீட்சி தொடரும்
December 17, 2024
சட்டப்பேரவையில் ஓபிஎஸின் இருக்கை மாற்றம்
February 14, 2024
