2025ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் அணுசரிக்கப்பட்ட இறந்தோர் நினைவு நாள் விடுமுறை காலத்தில், 95 இலட்சத்து 93 ஆயிரம் பயணிகள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டனர். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகமாகும். இச்சுற்றுலா பயணத்தின் மொத்த வருமானம் 1150 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.5 விழுக்காடு அதிகமாகும்.
வாங்ஃபுஜிங், ஒலிம்பிக் பூங்கா, தியனஆன்மென் பகுதி ஆகியவை பெய்ஜிங்கில் மிக அதிக பயணிகளை வரவேற்ற முதல் மூன்று காட்சி இடங்களாகும்.
இக்காலத்தில், பெய்ஜிங்கில் 877 அரங்கேற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. பெய்ஜிங்கில் உள்ள பல்வேறு நிலை பொது பண்பாட்டுச் சேவை நிறுவனங்கள், பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்தின.