பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் கலந்து கொண்டார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையர் ஜூலை 8ஆம் நாள் கூறுகையில், ரியோ டி ஜெனிரோ அறிக்கை, உலக செயற்கை நுண்ணறிவு மேலாண்மை பற்றிய அறிக்கை, காலநிலை நிதி கட்டுக்கோப்பு பற்றிய அறிக்கை ஆகியவை இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றார்.
மேலும், இந்த உச்சி மாநாட்டை வாய்ப்பாக கொண்டு, பிரிக்ஸ் எழுச்சியைத் தொடர்ந்து பின்பற்றி, பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் முயற்சிகளை மேற்கொண்டு, கூட்டுப் மதிப்பைப் பரவல் செய்து, கூட்டு நலன்களைப் பேணிக்காக்கவும், உலக மேலாண்மை மேலும் நியாயமான மற்றும் உயர் பயனுள்ள திசையை நோக்கி முன்னேறுவதைத் தூண்டவும் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.