அமெரிக்காவில் வரலாற்று காணாத அளவில் வர்த்தக பற்றாகுறை ஏற்பட்டது

அமெரிக்க அரசுத் தலைவர் டிராம்ப் 2ஆவது பதவி காலத்தில் மேற்கொண்ட சுங்க வரி கொள்கைக்கு அமெரிக்க உச்ச நீதி மன்றம் 20ஆம் நாள் தடை விதித்தது. தற்போதைய அமெரிக்க வர்த்தக சுங்க வரி, 20ஆவது நூற்றாண்டின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மிக உயர்வான பதிவை எட்டியது. ஆனால், கடந்த ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக பற்றாகுறை முன் கண்டிராத 1 இலட்சத்து 24 ஆயிரத்து 90 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. வர்த்தக பற்றாகுறையைக் குறைப்பதை நோக்கமாக கொண்ட சுங்க வரி வசூலிப்பு கொள்கை, மிக உயர்வான வர்த்தக பற்றாகுறையை ஏற்படுத்தியது.

இது குறித்து சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில், சுங்க வரி நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்தது என்று 94.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சுங்க வரி அமெரிக்க வர்த்தக கட்டமைப்பைச் சரிப்படுத்தாது என்று 91.2 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். அமெரிக்க உள்நாட்டு பொருளாதார கொள்கை, வர்த்தக பற்றாகுறையின் முக்கிய காரணமாகும் என்று 86.7 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author