NEEK படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா  

சமீபத்தில் வெளியான தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்தியது.

அதன் பின்னர் ஓடிடியிலும் பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையே, தனுஷ் அவரது சகோதரி மகனை வைத்து இயக்கியுள்ள ‘நிலவு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இப்படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பாரோ வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இப்பாடலின் மற்றொரு சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது.

SJ சூர்யா நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டதன் படி, இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளது தனுஷின் மகனும், ரஜினியின் பேரனுமான யாத்ரா தனுஷ் ஆவார்.

இந்த தகவல் வெளியானதும் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author