இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 700 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் முகமது நசுருதீன் ஆகிய இருவர் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் நிலையில் போலீசார் இவர்களை சந்திக்க திடீரென அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக 700 கிலோ கடல் அட்டைகளை பதப்படுத்தி கொண்டிருந்தனர். இதைக்கண்ட காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

More From Author