சீன-அமெரிக்க இளைஞர்கள் இரு நாட்டுறவுக்கு புதிய பங்காற்ற வேண்டும்: ஷிச்சின்பிங்

மேசை பந்துத் தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் மற்றும் சீன-அமெரிக்க இளைஞர்களின் உடற்பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகளின் துவக்க விழாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அப்போது அவர் குறிப்பிடுகையில், 55ஆண்டுகளுக்கு முன் சீன-அமெரிக்க முன்னாள் தலைவர்கள் அரசியல் விவேகம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் இரு நாட்டு மக்களின் நட்புப் பரிமாற்றத்துக்கான கதவைத் திறந்தார்கள். இன்று, இரு நாட்டு இளைஞர்கள் மேசைப் பந்து நட்பைத் தொடர்ந்து விளையாட்டு பரிமாற்ற நிகழ்ச்சிகளை மேற்கொள்வது இரு நாட்டு நட்பு லட்சியத்துக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகும். மக்கள் தான் சீன-அமெரிக்க உறவின் அடிப்படையானவர்கள். எதிர்காலம் இளைஞர்களால் தான் சார்ந்திருக்கப்படும். இரு நாடுகளின் பல்வேறு துறையினர்கள் குறிப்பாக இளைஞர்கள் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளில் புரிந்துணர்வை அதிகரித்து நட்புப் பிணைப்பைக் கூட்டாக நெருக்கமாக்கி சீன-அமெரிக்க உறவின் சுமுகம், ஆரோக்கியம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேசை பந்துத் தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் மற்றும் சீன-அமெரிக்க இளைஞர்களின் உடற்பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகள் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்றன.

 

Please follow and like us:

You May Also Like

More From Author