சீனத் தேசிய கல்வி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
செப்டம்பர் 10ஆம் நாள் சீனாவின் 40ஆவது ஆசிரியர் தினமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி சார்பாக, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் மனமார்ந்த வணக்கங்களையும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர்களை மதிப்பது, கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை சீன தேசத்தின் சிறந்த பாரம்பரியமாகும். ஆசிரியர்களின் அரசியல் தகுநிலை, சமூக நிலை மற்றும் தொழில்முறை நிலையை மேம்படுத்தி, ஆசிரியர்களின் தொழில்முறை கௌரவம் மற்றும் நியாயமான உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆசிரியர்கள் உயர்ந்த சமூக கெளரவம் அளித்தல் மற்றும் சமூக ரீதியாக மிகவும் மரியாதைக்குரிய தொழில்களில் ஒன்றாக மாறட்டும் என்றார்.