ஐரோப்பிய நாடுகளில் நடந்துவரும் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டங்களுக்குப் பின்னால் சர்வதேச சக்திகள் இருப்பது அம்பலமாகியுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், இந்த நாடு கடந்த கூட்டணியால் குறிவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிரதமர் மோடிக்கு உள்ள மக்கள் ஆதரவு காரணமாக கரப்பான் பூச்சிகளின் விஷ முயற்சி தோல்வியடைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபரில் விலைவாசி உயர்வு மற்றும் பள்ளி உள்கட்டமைப்புப் பற்றாக்குறைக்கு எதிராக பிரான்சில் 5,50,000 க்கும் மேற்பட்டோர் திரண்ட நடத்திய போராட்டங்களில் வன்முறைகள் வெடித்தன.
வாகனங்கள் தீ வைக்கப் பட்டன. ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
இது குறித்து ஒரு காலத்தில் மிக உன்னதமாக இருந்த பிரான்ஸ் நாடு, தறிகெட்ட புலம்பெயர்ந்தோரின் வருகையாலும் தீவிரவாதச் சிந்தனை கொண்ட ஜிஹாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டு, சூறையாடப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக கூறியிருந்தார்.
பிரான்சில் பற்றிய அரசுக்கு எதிரான போராட்ட நெருப்பு, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா, அல்பேனியா என ஐரோப்பா நாடுகள் முழுவதும் பரவியுள்ளன.
அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளது போலவே புலனாய்வு பத்திரிகையாளர் அஸ்ரா நோமானியும் தனது ‘கேயாஸ் இன்க்.’ (Global Chaos Inc) புலனாய்வு அறிக்கையில், பிரான்ஸ் வன்முறைக்கு பின்னால் நெவில் ராய் சிங்கத்தின் கம்யூனிச மார்க்சிய பிரச்சார நெட்வொர்க்-கள் இருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
ஐரோப்பிய நாடுகளில் நடந்துவரும் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டங்களுக்குப் பின்னால் தற்போது சீனாவில் வசித்து வரும் அமெரிக்கப் பின்னணி கொண்ட தொழில்நுட்பத் தொழிலதிபரான நெவில் ராய் சிங்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தனது பெரும் சொத்துக்கள் மூலம் பல இடதுசாரி மற்றும் கம்யூனிச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சிந்தனை மேடைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து பிற நாடுகளில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒன்பது நாடுகளில் 54 அமைப்புகளிலிருந்து 101 குழுக்களாக விரிவடைந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
வரும் நவம்பர் 20ம் தேதி ஒருங்கிணைக்கப்பட்ட ‘சர்வதேச இளைஞர் வேலைநிறுத்தத்திற்காக’ 12 நாடுகளில் உள்ள 30 ஐரோப்பிய கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச இளைஞர் அமைப்புகளின் கூட்டணி ஐரோப்பா முழுவதும் சாலை மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட BreakThrough News, மன்ஹாட்டனில் உள்ள The People’s Forum, கம்யூனிச சிந்தனையாளர் விஜய் பிரசாத் நடத்தும் Tricontinental மற்றும் Progressive International ஆகிய அமைப்புகள் நெவில் ராய் சிங்கத்தின் நிதியுதவியால் தான் இயங்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டங்கள் மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடந்த எதிர்கட்சிகளின் போராட்டங்களின் பின்னணியில், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க இந்த நெட்வொர்க் தீவிரமாகச் செயல்பட்டதாக பல்வேறு விசாரணை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சமூக ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் தளங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களையும், தீவிர செயல்பாட்டாளர்களையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைப்பது,சர்வதேச அளவில் இருந்து போராட்டக்காரர்களுக்குத் தேவையான நிதி, சட்ட உதவி மற்றும் பிரச்சார உத்திகளை வழங்குவது, உள்நாட்டுப் பிரச்சனைகளை உலகளாவிய மனித உரிமைப் பிரச்சனையாக மாற்றி, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது என இந்த நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது.
நெவில் ராய் சிங்கத்தின் நெட்வொர்க் தான், வெவ்வேறு நாடுகளில் உள்ள உள்ளூர் போராட்டங்களை ஒன்றிணைத்து (Chaos Inc) ‘கேயாஸ் இன்க்.’ என்ற மாபெரும் சர்வதேசப் போராட்ட நெட்வொர்க்காக மாற்றுவதற்குப் பின்னணியாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவும் தற்போது நெவில் ராய் சிங்கத்துக்குச் சொந்தமான அமைப்புகளின் நிதி ஆதாரங்களைக் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது.
முன்னதாக இந்த நெட்வொர்க் திட்டமிட்ட வன்முறைகள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு ஆகியவை இந்தியாவில் சாத்தியமாகவில்லை.
உள்நாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் வலிமையான உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் 7.7 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள இந்தியா, உலகின் அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாகத் தனது தக்கவைத்துக் கொண்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ஈரான் என இரண்டு பெரிய போர்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலிகளைக் கடுமையாகச் சீர்குலைத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன.
உலக பொருளாதாரமே தடுமாறிய நிலையில் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையால் பெரும் எண்ணெய் நெருக்கடியில் இருந்து உலக நாடுகள் மீண்டழுந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளைப் போல், புவிசார் அரசியல் பதற்றங்களை நேரடியாகப் பொதுமக்கள் மீது மத்திய அரசு சுமத்தவில்லை.
மாறாக தனது எரிசக்தி தேவைக்கான எண்ணெய் இறக்குமதியை 25 நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்திய இந்தியா உள்ளூர் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களை விரைவாக மறுசீரமைத்தது. மேலும், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுடன் இணைந்து 75,000 கோடி மதிப்பிலான பெரும் நிதிச் சுமையையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டது.
எரிசக்தி சேமிப்பு மற்றும் தன்னிறைவுக்கான நடவடிக்கைகளை முடக்கிவிட்டதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடுமையான பணவீக்கத்தை வெற்றிகரமாகச் சரிசெய்து உள்நாட்டு எரிபொருள் பற்றாக்குறையையும் தடுத்தது.
இதற்கிடையே நீட் தேர்வு வினாத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான தனது போராட்டங்கள் மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் என்ற பெயரில் தீவிரவாதச் சிந்தனை கொண்ட இடதுசாரிகள், மாணவர்களிடையே இருந்த உண்மையான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டது.
தொடர்ந்து தேர்தல் முறைகேடு என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசை கவிழ்க்கும் போராட்டடத்தை முன்னெடுத்தது.
நாட்டின் வலிமையான தலைமைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் ஐரோப்பிய நாடுகளைத் தீக்கிரையாக்கிய கரப்பான் பூச்சிகளின் ஆட்டம் இந்தியாவில் எடுபடாமல் போயுள்ளது.
