சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் உள்ளூர் நேரப்படி நவம்பர் 16ஆம் நாள் பிற்பகல் பெரு நாட்டின் லிமா நகரில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக, சீன-அமெரிக்க உறவு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்த போதிலும், எங்களின் இருவரது தலைமையின் கீழ் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, நிதானமாக வளர்ச்சியடைந்துள்ளது என்றார்.
தற்போது, உலக நிலைமை பதற்றமாக உள்ளது. மனித குலம் முன்னேப்போதும் கண்டிராத சவால்களைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புகளை மேற்கொண்டால் தான் கூட்டு வளர்ச்சியை நனவாக்கும். உலகத்திலுள்ள இரு பெரிய நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் உலகத்துக்கு உறுதித்தன்மை வாய்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான ஆற்றலை ஊட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சி, இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், மனித குலத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடையது. இரு தரப்பும் இரு நாட்டு மக்களின் நலன்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது நலன்களைக் கருத்தில் கொண்டு, சரியான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை நிலைநிறுத்தி, ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, கருத்து வேற்றுமைகளைக் கட்டுப்படுத்தி, சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சியை நனவாக்கி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகிறது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.