தமிழகத்தின் பல பகுதிகளில் ஜூன் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 06 முதல் 08 ஜூன் வரை, தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதோடு, 09 மற்றும் 10 ஜூன் தேதிகளில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை ஏற்படலாம்.
இதனால் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10 முதல் 12 வரை கனமழைக்கு வாய்ப்பு
