அதிக உற்பத்தியை’ஐ சாக்குப்போக்குச் சொல்ல பயன்படுத்தி அமெரிக்காவின் தந்திரம் பயன் பெறலாமா?

Estimated read time 0 min read

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் தனதுப் பதவிகாலத்தின் போது 2ஆவது சீனப் பயணத்தைத் தொடங்கினார்.

பயணத்திற்கு முன்பு, தகவல் தெரிந்தவர்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் வழியாக குறிப்பிட்ட பிரச்சினையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்துவது என்ற தந்திரத்தை அமெரிக்க தரப்பு இன்னும் செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம், பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு சாதகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிரவும், வெளிநாடுகளின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லனைய அடுத்து, சீனாவின் அதிகப்படியான உற்பத்தி திறன் பற்றியும் ஆண்டனி பிளிங்கன் விவாதிக்கவுள்ளார்.


சீனா மற்றும் அதிக சீனாவின் உற்பத்தி திறன் ஆகிய இரண்டும் தொடர்பாக, அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளைத் தேடி ஆய்வு செய்துள்ள அடிப்படையில், அதிக உற்பத்தி திறன் என்ற தலைப்பு, 2022ஆம் ஆண்டில் விவாதிக்கத் தொடங்கப்பட்டது.

இந்த கட்டுரைகளில் 2022ஆம் ஆண்டு முதல் இது வரை, இலக்கு வைக்கப்பட்ட சீனாவின் தொழில்களில் மாற்றம் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு, சீனாவின் அரைக்கடத்தி தொழில் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இது வரை, புதிய ஆற்றல் துறைகள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, சீனாவின் மின்சார வாகனங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது சாதக நிலை கொண்ட சீனாவின் தொழில், அதிக உற்பத்தி திறன் கொண்ட தொழிலாக மாறும். இதுதான் அமெரிக்க தரப்பின் கருத்து தான்.

சீனாவின் புதிய ஆற்றல் தொழிற்துறை மிகுந்த போட்டித்திறனை வெளிக்காட்டிய பொழுதே, சீனாவின் அதிக உற்பத்தித் திறன் பற்றிய கருத்தைப் அமெரிக்க செய்தி ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இதைப் பார்த்தால், சீனப் பொருளாதாரத்தின் சிறந்த சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.

அதன் பின்பறத்தில், சீனாவின் புதிய தரமான உற்பத்தி ஆற்றலின் வளர்ச்சி பற்றி அமெரிக்கா கவலைப்படுகிறது. சீனாவின் மேம்பட்ட தொழில்களின் வளர்ச்சியைத் தடுத்து வீழ்த்துவது அதன் உண்மையான நோக்கமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author