22வது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்ட்செங் செப்டம்பர் 17ஆம் நாள் முற்பகல் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் நான்கு முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, ஒன்று மற்றதன் வளர்ச்சி நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை உயர்தரமுடன் மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, பிரதேச திறப்புக்கான ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பைக் கூட்டாக கட்டியமைக்க வேண்டும். மூன்றாவதாக, தொழில் துறை சங்கிலி, வினியோக சங்கிலியுடனான கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, புதிய தொழில் துறை ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்த வேண்டும். நான்காவதாக, நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பகிர்வை அதிகரித்து, மக்கள் தொடர்பு வசதிமயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், சீனா, உயர்நிலை திறப்புப் பணியின் மூலம், உலகத்துக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, சொந்த உயர்தர வளர்ச்சியின் மூலம், பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.