சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி ஆகஸ்டு 21ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாராத பிரமுகர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை உறுதியாக முன்னேற்றுவது பற்றிய முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்மானங்கள் குறித்து, பல்வேறு ஜனநாயக கட்சிகளின் மத்தியக் குழுக்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்கள் ஆகியோரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இக்கூட்டத்தில் கேட்டறியப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், நாட்டின் ஆட்சிமுறைக்கு முன், கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒரு வலிமையான நாட்டை உருவாக்க வேண்டுமானால், முதலில் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். நீண்டகால ஆட்சியிலும், சிக்கலான சூழ்நிலையிலும், ஆபத்து உணர்வு கொண்டு, கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்றும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்தின் வலிமைமிக்க தலைமை மையமாக விளங்குவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியும், சீனாவின் விவகாரங்களைச் செவ்வனே செயல்படுத்துவதற்கான திறவுகோல்களாகும். கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை உறுதியாக முன்னேற்றும் வகையில், கட்சியின் உள்புற பிரச்சினைகளைத் தொடர்ச்சியாகத் தீர்க்க வேண்டும் என்றும், புதிய யுகத்தில் கட்சிக் கட்டுமானத்தின் புதிய மாபெரும் திட்டப்பணியை முன்னேற்றும் விதம், முறை சார் சிந்தனை மற்றும் தொலைநோக்குத் தன்மை வாய்ந்த சிந்தனையைப் பின்பற்றி, ஒட்டுமொத்தமாக முன்னேற்ற வேண்டும் என்றும், சீனாவின் பதிய ரக அரசியல் கட்சி அமைப்புமுறையில் ஊன்றி நின்று, இதை செவ்வனே மேம்படுத்த வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
