ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் 29ஆம் நாள், ஐ.நா. பாதுகாப்பு அவையில், புதிய அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் கடல் சார் பாதுகாப்பு எனும் பொது விவாதத்தில் உரைநிகழ்த்துகையில், சர்வதேசச் சமூகம் புதிய அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கடல் சார் பாதுகாப்பு மற்றும் மக்களின் இன்ப வாழ்வுக்கு நன்றாக சேவை புரிய வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய அறிவியல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதோடு, அதிகமான எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகள் மக்களே முதன்மை என்ற அடிப்படையில் புதிய அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் மக்களின் இன்ப வாழ்வுக்குச் சேவை புரிய வேண்டும் என்றார். சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, புதிய அறிவியல் தொழில் நுட்பம் வழியாக, கடல் சார் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் அவர் கூறினார்.
