விரிவாக்கி, இத்தகைய புதிய துறைகளில் கட்சியின் தலைமையாற்றல், ஒற்றுமை மற்றும் செல்வாக்கை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் துணைச் செயலாளரும், தேசிய மேற்பார்வை ஆணையத்தின் துணை இயக்குநருமான சாங் ஃபூஹாய் கூறுகையில், ஊழல் செய்ய அஞ்சுதல், முடியாமை மற்றும் விருப்பமின்மையை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பது என்பது கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சிக்கான முக்கிய வியூகமாகவும் ஊழல் ஒழிப்புக்கான அடிப்படைக் கோட்பாடாகவும் உள்ளது என்று தெரிவித்தார். கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் முன்னெடுப்பது தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தீர்மானத்தில், சீனத் தனிச்சிறப்புடைய ஊழல் எதிர்ப்புக்கு 4 ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, ஊழலைத் தண்டிப்பதில் அதிக அழுத்தத்தை நிலைநிறுத்த வேண்டும். இரண்டு, அதிகாரப் பயன்பாடு மீதான கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்த வேண்டும். மூன்று, ஊழலற்ற சிந்தனையின் அடிப்படையை வலுவூட்ட வேண்டும். நான்கு, ஊழல் ஒழிப்பு பணியின் ஒட்டுமொத்த பயனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
