குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய வளைகுடா பிரதேசத்தில் இருந்து ஏபெக் நாடுகளுக்கு ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிப்பு

சீனச் சுங்கத் துறைத் தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய வளைகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 9 பெருநிலப் பகுதி நகரங்களில் இருந்து ஏபெக் உறுப்பினர்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 5 இலட்சத்து 58 ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 26.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டி, தொடர்ந்து 20 திங்கள் காலமாக அதிகரித்து வருகிறது.

இதில் இயந்திர மின் உற்பத்திப் பொருட்கள், ஒருங்கிணைந்த மின் சுற்று அமைப்புகள் உள்ளிட்ட உயர் நிலைத் தயாரிப்புக்கள், பசுமையான உற்பத்திப் பொருட்கள் ஆகியன இப்பிராந்தியத்தின் வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author