ஜெர்மனி அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பிங் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி அரசுத் தலைவர் ஸ்டைன்மேயருடன் அக்டோபர் 30ஆம் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-ஜெர்மனி தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இரு நாட்டுறவு உயர்நிலை வளர்ச்சியடைந்து வருகிறது. ஜெர்மனியுடன் இணைந்து, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்து, மேலும் நியாயமான உலக ஆட்சிமுறை அமைப்புமுறையின் கட்டுமானத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், ஜெர்மனி, திறப்பு வாய்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான மனப்பாங்குடன், சீனாவின் வளர்ச்சி மற்றும் சீனாவுடனான ஒத்துழைப்புகளை அணுகி, சீனாவின் மீது யதார்த்த மற்றும் நட்பார்ந்த கோள்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு, பசுமை மற்றும் கார்பன் குறைவு, சேவை வர்த்தகம், எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஜெர்மனியுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, எதிர்காலத்தின் போட்டியாற்றலைக் கூட்டாக உயர்த்த சீனா விரும்புகிறது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

ஸ்டைன்மேயர் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஜெர்மனி உறுதியுடன் பின்பற்றி வருவதாகவும், சீனாவுடன் உயர்நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author