சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 13ஆம் நாள், இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பிரிட்டன் நாட்டவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அந்நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லசுக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.
ஷிச்சின்பிங் இச்செய்தியில் கூறுகையில், இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் நாட்டவர்களுக்குச் சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோருக்கு அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்விபத்தில் காயத்துடன் தப்பித்துள்ளவர்கள் வெகுவிரைவில் குணமடையவும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதே நாள், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங்கும், பிரிட்டன் தலைமையமைச்சருக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.