மக்கெள மீதான அரசுரிமையை சீன மத்திய அரசு மீண்டும் இணைந்ததன் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என், மக்கெள ஆய்வு மையத்துடன் இணைந்து, மக்கெளவில் 1551 பேரிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. மக்கெளவில் “ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் வெற்றிகரமான நடைமுறையின் அதிக சாதனைகள், கருத்து கணிப்பில் பங்கெடுத்த மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில், மக்கெள சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் பணியை 93.9 விழுக்காட்டினர் பாராட்டினர். மக்கெள குடிமக்களின் அரசியல் உரிமையும் சுதந்திரமும் முழுமையாக உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன என்று 91.9 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மக்கெளவின் சமூக நல நிலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது என்று 90.8 விழுக்காட்டினர் பாராட்டினர்.
மக்கெளவின் செழுமை மற்றும் வளர்ச்சிக்கு தாய்நாடு முழுமையான ஆதரவு அளித்துள்ளது என்று 94.3 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மக்கெளவுக்கும் சீனப் பெருநிலப்பகுதிக்கும் இடையேயான தொடர்பு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது என்று 92.7 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
மக்கெளவில் நடைமுறைக்கு வரும் “ஒரே நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்”, “மக்கெள மக்களே மக்கெளவை நிர்வகிப்பது” ஆகிய கொள்கைகளின் மீது 93.9 விழுக்காட்டினர் முழு நம்பிக்கை கொள்கின்றனர்.