நாகையில் இன்று அக்னிவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு..!எந்தெந்த மாவட்டத்தினர் பங்கேற்கலாம்..?

Estimated read time 1 min read

நாகையில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 18-ந்தேதி (இன்று) முதல் வரும் 27-ந்தேதிவரை அக்னிவீரர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் அக்னிவீரர் டிரேஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள அனுமதி அட்டையை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
கடந்த மார்ச் 11-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் (www.joinindianarmy.nic.in) கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட முறைப்படி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் தேர்வில் பங்கேற்க முடியாது.
நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 18-ந்தேதி (இன்று), தூத்துக்குடி மாவட்டம் 19-ந்தேதி, கன்னியாகுமரி மாவட்டம் 20-ந்தேதி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் 21-ந்தேதி, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் 22-ந்தேதி, தென்காசி, நெல்லை மாவட்டங்கள் 23-ந்தேதி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் 24-ந்தேதி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25-ந்தேதியன்று தேர்வு நடைபெறும்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரம் தவறாமல் வந்துவிட வேண்டும். சீக்கியர்கள் தவிர மற்ற தேர்வாளர்கள் முகச்சவரம் செய்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்வதற்காக போதிய அளவில் தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை மற்றும் தானியங்கி முறையில் உள்ளவை. எனவே இடைத்தரகர்களை அணுகி மோசடியில் சிக்காதீர்கள். நேர்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Please follow and like us:

You May Also Like

More From Author